விவாகரத்திற்கு பிறகு தான் நிம்மதியா இருக்கேன்… பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி பேட்டி..!

1 Min Read
பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி பேட்டி..!

தமிழ் திரையுலகின் பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி விவாகரத்திற்கு பிறகுதான் நிம்மதியாக இருக்கிறேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.

ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான குக்கூ படத்தில் இடம்பெறும் ‘கோடையில மழை போல’ என்கிற பாடலை பாடி தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகம் ஆனார்.

வைக்கம் விஜயலட்சுமிக்கு பல படங்களில் பாட வாய்ப்பு கொடுத்தது இசையமைப்பாளர் டி இமான். இவர் கௌதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ படத்தில் புதிய உலகை தேடி போகிறேன் என்ற பாடலை பாடி பிரபலமானார். அதன் மீண்டும் டி இமான் இசையில் இவர் பாடிய ‘சொப்பன சுந்தரி நான் தானே’ என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது.

பின்னர் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி பாப்புலர் ஆன வைக்கம் விஜயலட்சுமி, மலையாளத்திலும் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி உள்ளார். பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண வாழ்க்கை சரியில்லாமல் அமைந்துவிட்டதால் பல பிரச்சனைகளை எதிர் கொண்டார்.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜயட்சுமி, ரசிகர்கள் என்னிடம் வந்து போட்டோ எடுத்துக்கொள்ளும் போதும், என்னை புகழ்ந்து பேசும் போதும் மனதிற்குள் ரொம்ப சந்தோஷமா இருக்கு, நமக்கு கூட ரசிகையா என்று நினைப்பேன். அதே போல எனக்கு பிடித்த பாடல் சொப்பன சுந்தரி தான் என்றார்.

மேலும் திருமண வாழ்க்கை குறித்து பேசிய வைக்கம் விஜயலட்சுமி, விவாகரத்திற்கு பிறகுதான் நிம்மதியா சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு பார்வை வந்தால் முதலில் என் அம்மா, அப்பா, அந்த கடவுளைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதே போல பூவு, மாலை, புடவை என சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசை என வைக்கம் விஜயலட்சுமி வருத்தத்துடன் பேசினார்.

Share This Article
Leave a review