சிதம்பரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ரோஜா என்பவருக்கும், கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது.சிலம்பரசன் கூலி வேலை செய்து வருகிறார். ரோஜா பட்ட படிப்பு முடித்துள்ளார்.
அப்போது வேலை முடித்து வந்த சிலம்பரசன் ரோஜாவின் கழுத்தை பிளாடால் அறுத்துவிட்டு தப்பியோடினார்.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணையில், திருமணமாகி இரண்டு மாதமே ஆன நிலையில் ரோஜா 4 மாத கர்ப்பமாக இருந்ததால் சிலம்பரசன் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதில் போலீசார் சிலம்பரசனை கைது செய்து விசாரித்திருக்கிறார்கள். அதில் பட்ட படிப்பு முடித்த ரோஜாவிற்கு கூலி வேலை பார்க்கும் சிலம்பரசனை திருமணம் செய்ய விருப்பம் இல்லை எனவும் வீட்டில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ரோஜாவும் செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் ரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலிசார் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.