மனைவியின் நடத்தையில் சந்தேகம் , முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் நடந்த கொலை முயற்சி

2 Min Read
பரணி

முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் பரபரப்பு , ஒப்பந்த ஊழியரை  கொள்ள முயன்ற கணவன் கைது .

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம்  அருகே உள்ள ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரை சேர்ந்த  பரணி என்பவரை காதலித்து வந்துள்ளார் .

பரணியின் பெற்றோர் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்கள் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டு தற்போது  ஈச்சங்குப்பம் கிராமத்தில் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார் .

தற்பொழுது பரணி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கணினி பதிவு செய்யும் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமாருக்கு மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார் . இதுகுறித்து பல தடவை பரணி காவல் நிலையத்திலும் புகார் அளித்த வண்ணம் இருந்துள்ளார் . கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இதேபோன்ற  தகராறில் பரணி தனது குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார் .

சரத்குமார்

அங்கிருந்தே தினமும் பணிக்கும் சென்று கொண்டு இருந்துள்ளார் . மனைவியை பிரிந்த சோகத்தில்  இன்றுகாலை தான் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக , முண்டியம்பாக்கம் மருத்துவனமணியில் அனுமதிக்கபட்ட சரத்குமார் தந்து மனைவியை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார் . இதனை நம்பி அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை பார்க்க வர வைத்துள்ளார்கள் அங்கிருந்த ஊழியர்கள் .

இருவரும் பேசி கொண்டிருக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . மேலும் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி பரணியை சரமாரியாக தாக்கியுள்ளார் .

இதில் தலை உற்பட பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்ட பரணியை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள்  மீட்டு பரணியை அவசர சிகிச்சை  பிரிவில் அனுமதித்தனர் . மேலும் இது குறித்து உடனடியாக விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சரத்துக்குமாரை போலீசாரிடம் ஒப்படைத்தனர் . போலீசார் அவரை கைதுசெய்து கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Share This Article
Leave a review