வாகன விபத்தில் கணவன் மனைவி பலி

0
62
தமிழரசி தனபால்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன் மனைவி உயிர் இழந்தனர்.


தஞ்சை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை, சன்னதி ரஸ்தா பகுதியில் வசித்து வந்தவர்கள் தனபால் (72). தமிழரசி (58). தம்பதியினர்.  கணவன், மனைவி இருவரும் திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென எதிர் திசையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் சென்ற வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தனபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து எவ்வளவு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து கொண்டே தான் இருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here