MP : பள்ளி ஆய்வகத்தில் மனித கரு , அதிர்ச்சியில் பெற்றோர்கள் .

1 Min Read
மனித கரு

தனியார் பள்ளி ஆய்வக கூடத்தில் மனித கரு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் , மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிச்சியில் ஆழ்ந்துள்ளனர் .

- Advertisement -
Ad imageAd image

மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 6ம் தேதி அன்று கிடைத்த தகவலை அடுத்து மத்திய பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் (எம்.பி.சி.ஆர்.சி) திடீர் ஆய்வு மேற்கொண்டது.

அப்போது, பள்ளியில் உள்ள உயிரியல் ஆய்வகத்தில் ஒரு குடுவையில் மனிதக் கரு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஓம்கார் சிங் தாக்கூர்

மனித கரு எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு பள்ளி நிர்வாகத்திடம் இருந்து திருப்திகரமான பதில் இல்லை.

இதையடுத்து, பள்ளிக்கு எதிராக மத்திய பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் போலீஸில் புகார் அளித்தது.

இதைதொடர்ந்து, போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்றாலும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து எம்.பி.சி.ஆர்.சி உறுப்பினர் ஓம்கார் சிங் தாக்கூர் கூறுகையில், “மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட கருக்கள் இருந்தாலும், அவற்றை வைத்திருக்க மற்ற அமைப்புகளுக்கு அனுமதி தேவை. ஆனால் இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்காததால் அவர்களிடம் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.

Share This Article
Leave a review