மனிதம் மலர்ந்தது முதியவரை மீட்ட காவலர்கள்.

1 Min Read
முதியவர்

கல்லுக்குள் ஈரம் உண்டு, மனித நேயம் மரணிக்கவில்லை என்பதற்கு சான்றாக தஞ்சையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் கோழி கழிவு குப்பையில் குப்பையோடு குப்பையாக கிடந்த முதியவரை மீட்டு முதலுதவி செய்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.தஞ்சையில் நடந்த சம்பவம் காவல் துறையினர் மீது நல்ல மதிப்பை உண்டாக்கி வருகிறது. இது போன்ற செயல்களை தான் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது செங்கிப்பட்டி பாலத்தின் அடியில் 70 வயது முதியவர் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட குப்பையில் குப்பையோடு குப்பையாக உடல் மெலிந்து சோர்வுடன் முனகியவாறு இருந்தார்.இதனை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் ராஜகோபால். சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் முதியவரை மீட்டு முதலுதவி செய்தனர்.

பின்னர் முதியவரை குளிப்பாட்டி, ஆடைகள் அணிவித்து, உணவு வழங்கினார்கள் பின்னர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் என்றால் அச்சம் கலந்த பார்வை இருக்கும் நிலையில் அவர்களுக்குள்ளும் மனித நேயமும் உண்டு என்பதற்கு சான்றாக அமைந்துள்ள இந்த வீடியோ பதிவை பார்த்து அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பெரும்பாலும் வீதிகளில் செல்லும் போது யாருக்கு என்ன நடந்தலும் கண்டுகொள்ளாத மனநிலைதான் எல்லோருக்கும் இருக்கும்.அதற்கும் காரணம் உண்டு நாம ஏதாவது உதவி செய்ய அதுவே நமக்கு எதிரா போய்விடும் இப்படியும் நடந்துள்ளது. சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் சமூக அக்கறையோடு நிறுவனங்கள் நடத்தி சாலையோரத்தில் உள்ள கேட்பாரற்றவர்களை ஆதரித்து வருகின்றனர்.

தஞ்சையில் நடந்த இந்த செயல் காவலர்களை வெகுவாக பாராட்டி வருகிறது.காவர்களும் இந்த செயலை செய்வார்களாக என்பவர்கள் மத்தியில் இந்த காவலர்கள் சிறந்து விளங்குகின்றனர்.அரசு இது போல உள்ளவர்களை மீட்டு உதவ வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Share This Article
Leave a review