“மக்களவை தொகுதி உறுப்பினராக ஓ.பி.ரவீந்திரநாத் தொடரலாம்” – நீதிபதிகள் உத்தரவு.!

0
41
ஓ.பி.ரவீந்திரநாத்

2019-ஆம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றியை பதிவு செய்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி அசத்தியது. ஒரே ஒரு தொகுதியாக தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பிரவீந்திரநாத் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றிபெற்றார். அதிமுகவில் வெற்றிபெற்ற ஒரே ஒருவர் அவர் மட்டுமே.

ஓ.பி.ரவீந்திரநாத்

வெற்றியை எதிர்த்து வழக்கு:

இந்த நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தேனி தொகுதியில் இருந்து மிலானி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், எம்.பி தேர்தல் வேட்பு மனுவில் வருமானம் உள்ளிட்ட உண்மையான விவரங்களை ஓ.பி.ரவீந்திரநாத் மறைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி இருந்தார். ஓ.பிரவீந்திரநாத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்டது சட்ட விரோதம் என தெரிவித்த மனுதாரர், தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத் தனது வருமானத்தில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாக கூறியது. விசிலடிக்க தொடங்கிய குக்கர், வீழ்த்தப்படுகிறதா இரட்டை இலை.

ஓ.பி.ரவீந்திரநாத்

உச்சநீதிமன்றம் அதிரடி:

அதுமட்டுமின்றி, 4.16 கோடி ரூபாய் அளவுள்ள அசையும் சொத்துகள் இருக்கும்போது, 1.35 கோடி ரூபாய் சொத்துகளை மட்டுமே கணக்கில் காட்டியது நிரூபணமாகி இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்றும் அதிரடியாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு செய்ய ஓ.பி.ரவீந்திரநாத் தரப்புக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினார் ஓ.பி.ரவீந்திரநாத். அவரது மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. தேனி மக்களவை தொகுதி உறுப்பினராக ஓ.பி.ரவீந்திரநாத் தொடரலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here