கன்னியாகுமரி கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு

0
50
தண்டனை பெற்றவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியில் உள்ள திருவாழிமார்பன் கோவில் கடந்த 2015ம் ஆண்டு திருவிழாவின் போது விளம்பர பதாகை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவனை குத்தி கொலை செய்த வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாகர்கோவில் அமர்வு நீதிமன்றம் கொலையில் தொடர்புடைய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் ஊர். பகுதியில் பிரசித்தி பெற்ற திருவாழிமார்பன்  கோவில் உள்ளது, இக்கோவிலானது திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது,இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இக்கோவில் திருவிழாவின் போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விளம்பரப் பதாகைகளை வைத்துள்ளனர்,மேலும் ஒரு தரப்பினர் அங்கு பதாதைகள் வைக்க முயற்சி செய்துள்ளனர்,

ஆயுள் தண்டனை பெற்றவர்கள்

அப்போது இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது,இதில் லக்ஷ்மணன் மற்றும் வேலு என்ற கல்லூரி மாணவர்களை வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பியான திலிப்குமார்(32),தினேஷ்குமார்(35),மற்றும் தந்தை மகனான மணிகண்டன்(24),திருவாழி என்ற பொடி திருவாழி(60) ஆகிய நான்கு பேரும் கல்லூரி மாணவர்களான
லட்சுமணன்,வேலுவை சம்பவத்தன்று வழிமறித்து ஆயுதங்கள் கொண்டு தாக்கியும் கத்தியால் குத்தியும் கொலை வெறி தாக்குதலை அறங்கேற்றியுள்ளனர்,
அப்போது வேலு சிறு காயங்களுடன் உயிர்தப்பித்தார்,ஆனால் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பலியானார்,இது தொடர்பான வழக்கு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் நடைபெற்று வந்தது, அதன் பிறகு நாகர்கோவில் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக வழக்கு விசாரணையில்  இருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
,இதனை நாகர்கோவில் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நான்கு பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூபாய் 8000 அபராத தொகையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here