ஒடுக்கப்பட்டு வரும் தலித்துகளுக்கு பாடுபட்டு வரும் தலித் அல்லாதவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த விருது நிகழ்வில் இந்த ஆண்டு திரை நாயகன் பிரகாஷ்ராஜ், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் முத்தரசன், பெரியாரியல் அறிஞர் அருள்மொழி, பேராயர் எஸ்ரா சற்குணம், பேராசிரியர் ராஜ் கவுதமன், எஸ் என் சிக்கந்தர் சுப்பராயலு உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட்டது.அந்த விழாவில்,

சோழர் காலத்தில் எத்தனை பிராமண ஊர்கள் இருந்தன என்ற புள்ளி விவரங்களைக் கூறிய அவர், பிராமணர்கள் ஏன் அரசர்களால் குடியேற்றப்பட்டார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழாவில் செம்மொழி ஞாயிறு விருதைப் பெற்ற தொல்லியலறிஞர் எ.சுப்பராயலு ஏற்புரையாற்றினார். தமிழ்ச் சமூகத்தில் சனாதனம் என்பது எப்படி சோழர் காலத்தில் நிலைபெற்றது என்பதை விளக்கிய அவரது உரை முக்கியமானது.
“ கல்வெட்டுகள் பெரும்பாலும் கோயில்களில்தான் வெட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று இருக்கும் ஏராளமான கோயில்கள் பக்தர்களுக்கு ஆறுதலைத் தருவதாகக் கருதப்படுகின்றன. அது மட்டுமின்றி இந்தக் கோயில்கள் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளைக் காப்பாற்றுவதற்கும்கூடக் காரணமாக உள்ளன. கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகள் அரசர்களையும், அதிகாரம் உள்ளவர்களையும் பற்றித்தான் பெரும்பாலும் பேசுகின்றன. அவற்றில் சபால்டர்ன் என சொல்லப்படும் விளிம்புநிலை மக்களைப்பற்றி அவ்வளவாக செய்திகள் இல்லை.
இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு நடுநிலையான வரலாற்றை எப்படி எழுதுவது என்பது வரலாற்றாசிரியர்களுக்கு மிகப்பெரிய சவால்” என அவர் குறிப்பிட்டார். சோழர் காலத்தில் எத்தனை பிராமண ஊர்கள் இருந்தன என்ற புள்ளி விவரங்களைக் கூறிய அவர், பிராமணர்கள் ஏன் அரசர்களால் குடியேற்றப்பட்டார்கள். வருணக் கோட்பாட்டை நிலை நிறுத்தவே அவர்கள் அப்படிச் செய்தார்கள். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனக் கோட்பாடு பிராமணர்களால் அப்படித்தான் நிலை நிறுத்தப்பட்டது.
‘சனாதனம் என்பது இப்போது பிராமணர்களிடம் மட்டும் இல்லை, எல்லா சமூகத்தினரிடமும் உள்ளது. அதை அகற்றுவதற்கு ஒரு பெரியார் போதாது, பல பெரியார்கள் தேவை’ என அவர் குறிப்பிட்டார்.