ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 27 தேதிக்கு ஒத்திவைப்பு .!

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு , குற்றச்சாட்டு பதிவுக்காக ஆகஸ்ட் 27 தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம் .

- Advertisement -
Ad imageAd image

சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீட்டுமனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்தாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு , ஐ.பெரியசாமி, ஜாபர்சேட் உள்பட ஏழு மீது 2013 ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு.

அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு, குற்றச்சாட்டுகள் பதிவுக்காக ஆகஸ்ட் 27ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/madras-high-court-adjourned-the-asset-case-against-minister-ponmudi/

கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உட்பட சிலருக்கு திருவான்மியூரில் 3457 சதுர அடி மற்றும் 4763 சதுர அடி வீட்டுமனைகளை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக, அப்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்கா சங்கர் உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை, கடந்த 2013ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்களில் சிலரை விடுவித்தும், சிலர் மீதான வழக்கை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில், ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யபட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Share This Article
Leave a review