இந்திய அளவில் நீட் எதிர்ப்பு வலுத்துவருவதாகவும்,நீட் மோசடி குறித்து உச்ச நீதிமன்றமும் அதனை கண்டித்திருப்பதால் நீட் தேர்வு மோசடிகள் இந்திய மக்கள் உள்ளங்களிலையே ஊறி இருப்பதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வு பணிகளை அமைச்சர் பெரும்படி மேற்கொண்டார் விக்கிரவாண்டி வானூர் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கிய பொன்முடி பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்தார் திமுக சார்பில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயர்நீதி 21 தியாகிகளுக்கு மண்டபம் கட்டி தரும் அறிவிப்பை தொடர்ந்து மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது அத்துடன் மறைந்த முன்னாள் அமைச்சர் எ கோவிந்தசாமி அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவது மற்றும் அவரது சிலை வைக்கப்பட்டு அவற்றை திறந்து வைப்பது என்கிற அறிவிப்புகளும் இருந்தது அந்த வகையில்
விழுப்புரம் அருகேயுள்ள வழுதரெட்டியில் முன்னாள் மறைந்த விவசாய துறை அமைச்சர் ஏ.கோவிந்தசாமி மற்றும் இட இதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு 9 கோடி 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மணிமண்டப பணியை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மணி மண்டபம் கட்டப்பட்டு வரும் பணிகள் முடிந்துவிட்ட தருவாயில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மணிமண்டபத்தில் ஏ.கோவிந்தசாமி சிலைகள் வைக்கபட்டு பிறகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மணி மண்டபத்தை திறந்து வைப்பார்கள் என்றும் வரலாற்றை எடுத்து சொல்லும் வகையில் இந்த மணி மண்டபம் அமையும் என தெரிவித்தார்.
நீட் தேர்வு வேண்டும் என அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால் நீட் தேர்வு கூடாது என்று சொல்லுகிற பாட்டாளி மக்கள் கட்சி அவர்களுடன் தான் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்கள் என்றும் கொள்கை அடிப்படையில் இந்திய அளவில் ஸ்டாலின் தலைமையில் இருந்த அணிகள் நீட் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்போது இந்திய அளவில் நீட் தேர்வு எதிர்ப்பு வலுத்துவருவதாகவும்,நீட் மோசடி குறித்து உச்ச நீதிமன்றமும் அதனை கண்டித்திருப்பதால் நீட் தேர்வு மோசடிகள் இந்திய மக்கள் உள்ளங்களிலையே ஊறி இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.