- மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கு.
- வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, கிருஷ்ணசாமி, உள்ளிட்டோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “நாங்கள் இரு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் 11.02.2028-ல் முடிகிறது. குத்தகை காலம் முடிந்த பிறகு தேயிலை தோட்ட நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் கீழ் அரசிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
கிருஷ்ணசாமி தரப்பில், “மாஞ்சோலை பகுதி மக்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “மாஞ்சோலை தொழிலாளர்கள் பிபிடிசி நிறுவனத்தால் அங்கு பணியமறுத்தப்பட்டவர்கள். அவர்களை பாரம்பரிய வனவாசிகளாக எவ்வாறு கருத முடியும்? தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைக்கான திட்டம் ஏதும் உள்ளதா? என் கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், ” அது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணசாமி, “நீண்ட காலமாக வனத்தில் வசிப்பவர்களை பாரம்பரிய வனவாசிகளாக கருதலாம் என விதிகள் உள்ளது. ஆகவே, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும்” என வாதிட்டார். இதை தொடர்ந்து நீதிபதிகள்
கிருஷ்ணசாமி தரப்பில் வனம் சம்பந்தமாக கோரிக்கை வைத்ததால் இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் ஏற்கனவே இந்த நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால நிவாரணம் தொடரும் எனவும் உத்தரவிட்டனர்.