நடிகர் விமலுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்.!

1 Min Read

பட தயாரிப்புக்காக பெற்ற 3 கோடியே 6 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நடிகர் விமல், தனது ஏ 3 வி பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்த “மன்னர் வகையறா” படத்துக்காக கோபி என்ற பைனான்சியரிடம் 5 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இதில் 3 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த போதும், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, 3 கோடியே 6 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவிட வேண்டும் என பைனான்சியர் கோபி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக முன்பு விமல் ஆஜராகி இருந்த நிலையில், சாட்சிகளை விசாரிக்க அவர் தரப்பில் யாரும் முன் வராமல் இருந்திருக்கின்றனர். இதனால் விமல் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் மனு கொடுத்திருக்கிறார். இதை குறுக்கு விசாரணை செய்த நீதிபதி, வழக்கை விமல் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார் என்று கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ரூ.300 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், விமல் கடனை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இந்த வழக்கு விசாரணையில் விமல் தரப்பு ஆஜாராகமல் இருந்ததால், கோபியிடம் பெற்ற கடனை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று விமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a review