இலங்கை கிளிநொச்சியில் மாவீரர் நாள் தடைகளை மீறி நடைபெற்றது.

3 Min Read
கிளிநொச்சி

முதல் போராளி லெப். சங்கர் (சத்தியநாதன்)

- Advertisement -
Ad imageAd image

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளி லெப். சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ம் தேதியைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.

பிரபாகரன்

கிளிநொச்சியில் உணர்வுப்பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாவீரர் நினைவு நாள் உணர்வுப்பூர்வமாக நடத்தப்பட்டது.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.இதன்போது மாவீரர்களின் உறவுகள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு தாய் மண் விடுதலைக்காக தன்னுயிரை நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதன்போது மாவீரர்களின் உறவினர்கள் கண்ணீர் சிந்தி கதறியழுத காட்சிகள் அங்கிருந்த பலரின் மனதை நெகிழவைத்திருந்தது.

மாவீரர் துயிலுமில்லம்

வரலாறு காணாத வகையில் மாவீரர் தின நிகழ்வில் மக்கள் திரண்டமையால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.பொதுச் சுடரினை கரும்புலி மாவீரர்களான மேஜர் கதிரவன், லெப் கதிரவன் ஆகியோரின் சகோதரனும் ஈகைச் சுடரினை மாவீரர் இரண்டாம் லெப்டினன் பாபு அவர்களின் தந்தையும் ஏற்றி வைத்துள்ளனர்.

கிளிநொச்சியில்

இதனை தொடர்ந்து மலர் மாலையினை கரும்புலி மேஜனர் நிலாகரனின் சகோதரியும், மாவீரர்களான தில்லையழகன், புண்ணகைமாறான் ஆகியோரின் சகோதரனும் அணிவித்தனர் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் இடம்பெற்றதோடு, மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் தினம் எனும் பெயருடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூரும் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இந்திய ராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால் மாவீரர் தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அந்த வருடத்தின் மாவீரர்களின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலை புலிகள் உத்தியோக பூர்வமாக வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அவர்கள் இந்த எண்ணிக்கையோடு இணைப்பதில்லை. அது தமிழீழ விடுதலைப் புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கிளிநொச்சி

இறுதி மாவீரர் தினம்

2008ம் ஆண்டு மாவீரர் தினமே தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் அக்டோபர் 30ம் தேதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர்.

2009 போர் முடிந்த பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போரின் பின்னர் இலங்கை இராணுவத்தினரால் மாவீரர்களின் கல்லறைகளும் நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. ‘மாவீரர் துயிலும் இல்லங்கள்’ இருந்த இடங்களை அழித்துவிட்டு அதில் இராணுவ முகாம்களை அமைத்தனர். எனினும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளினை அனுசரிக்கின்றனர்.

Share This Article
1 Review