காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தனது கணவர் : மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி மனைவிதொடர்ந்த வழக்கு.!

2 Min Read
உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு
  • காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தனது கணவர் திராவிட மணியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி மனைவி தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

திருச்சியை சேர்ந்த ஷாலினி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனது கணவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிடக்கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது கணவர் திராவிட மணி தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த எனது கணவரை, ஜீயாபுரம் காவல்துறையினர் 63 மது பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கூறி கைது கைது செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
 

பின்னர் 27ஆம் தேதி திருச்சி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் படுத்தி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றபோது, சிறை மருத்துவமனை தரப்பில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு எனது கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். பொய் வழக்கு பதிவு செய்து எனது கணவரை காவல் துறையினர் தாக்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். என்னிடம் முறையாக தகவல் தெரிவிக்காமல் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது உடலை முறையாக மறு உடற்கூராய்வு செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். ஆகவே எனது கணவர் திராவிடமணியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. ஜியாபுரம் காவல் ஆய்வாளர் தரப்பில், ” சம்பவத்தன்று 63 மது பாட்டில்களை அவர் சட்டவிரோதமாக கொண்டு சென்றபோதே கைது செய்யப்பட்டார். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சி மகாத்மா நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/on-the-occasion-of-navratri-festival-kejalakshmi-decoration-for-sri-periyanayake-amman-in-thanjavur-big-temple/

அதையடுத்து நீதிபதி, “மனுதாரரின் கணவரது உடல் செப்டம்பர் 29ஆம் தேதி மருத்துவக் குழுவினரால் உடற்கூராய்வு செய்யப்பட்டு, வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அதன்ட் பின்னர் உடற்கூறு ஆய்வின் அறிக்கையும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை வாங்க மறுத்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடற்கூராய்வு அறிக்கையில் 2 உள்காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காயம் 4 நாட்களுக்கு முன்பாகவும், மற்றொரு காயம் 2 வாரங்களுக்கு முன்பாகவும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மறு உடற்கூறாய்வு ஏன் செய்யப்பட வேண்டும்? என்பதற்கான பொருத்தமான காரணங்கள் எதையும் மனுதாரர் குறிப்பிடவில்லை. ஆகவே மறு உடற்கூராய்வு செய்ய தேவையில்லை என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share This Article
Leave a review