விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளான வண்டிப்பாளையம், முருக்கேரி, பிரம்மதேசம், ஆலத்தூர், அனுமந்தைக்குப்பம், கூனிமேடுக்குப்பம், பொம்மையார்பாளையம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள 3500 ஏக்கர் உப்பளம் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் 2000-க்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3500 பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது இந்த தொழிலை நம்பி இப்பகுதியில் 2000ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர் இப்பகுதியில் உப்பு தொழிலே இங்கு பிரதான தொழிலாக உள்ளது.தமிழகத்தின் உப்பு உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் பகுதி மரக்கானம்.தென்னிந்தியாவிற்க்கு அதிக அளவு உப்பு வினியோகம் செய்யும் இடமும் மரக்காணம் தான். இப்பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து அக்டோபர் நவம்பர் மாதங்கள் வரை நடைபெறும் இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது இந்த உப்பு பல்வேறு மாவட்டங்களுக்கு உணவுக்காக மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதுபோல் பெய்து வரும் கனமழையால் உப்பளங்கல் மழை நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கிறது இதனால் இப்பகுதியில் உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக உப்பள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது போன்ர மழைக்காலங்களில் பாதிக்கப்படு உப்பள தொழிலாளர்களுக்கு அரசு நிவாரனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மரக்காணத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மரக்காணம் பகுதியில் உள்ள 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.கடல் சீற்றம் மற்றும் வடகிழக்கு பருவ மழை,புயல் போன்ற காரணங்களால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் மழைக்காலம் முடிந்ததும்தான் இந்த பகுதியில் உப்பு உற்பத்தி தொடரும்.இந்த நிலையில் ஏற்கனவே உர்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாக்கும் பணியில் தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர்.