Ocean-Gate Titan : மாயமான நீர்மூழ்கி கப்பல் , கப்பலில் பயணம் செய்த 5 பேரின் நிலை என்ன ?

4 Min Read
Ocean-Gate டைட்டன் நீர்மூழ்கி கப்பல்

அட்லாண்டிக் பெருங்கடலில் காணாமல் போன Ocean-Gate டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுஇருக்கும் கனேடிய விமானம், கடலில் மூழ்கிய 5  சுற்றுலா பயணிகள் கடைசியாக அறியப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்து இடைவிடாத “இடிக்கும்” சத்தங்களைக் கண்டறிந்துள்ளது .

- Advertisement -
Ad imageAd image

P-3 கடல்சார் கண்காணிப்பு விமானத்தால் கண்டறியப்பட்ட சத்தங்களின் விளைவாக, தொலைவிலிருந்து இயக்கப்படும் வாகனங்கள் (ROV கள்) “சத்தங்களின் தோற்றத்தை ஆராயும் முயற்சியில்” சத்தம் கண்டறியப்பட்ட பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இந்த புதிய தகவல் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் தலைவர்களுக்கு  மின்னஞ்சல்கள் மூலம் பகிரப்பட்டுள்ளது .

கடலோர காவல்படை அதிகாரிகள்  உணரப்பட்ட ஒலிகளின் தன்மை ,  அளவு அல்லது அவை எவ்வாறு எதிர்கொண்டன என்பது குறித்த முழு விபரம் இன்னும் தெரியப்படுத்தவில்லை .

காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் , அமெரிக்காவைச் சேர்ந்த OceanGate Expeditions என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது , இந்த நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் 96 மணி நேரம் வரை சுவாசிக்கும் வகையில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு (1912-ம் ஆண்டு) இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரிலிருந்து டைட்டானிக் என்று சொகுசு கப்பல் 2 ஆயிரத்து 224 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி புறப்பட்டது.

துரதிஷ்டவசமாக இந்த சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருக்கும் போது  ராட்சத பனிப்பாறையில் மோதி இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது. இந்த  கோர கப்பல்  விபத்தில் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலக வரலாற்றில் இன்று வரை இந்த விபத்து மிக மோசமான கப்பல் விபத்தாக பார்க்கப்படுகின்றது .

இந்த சோக சம்பவம் நடந்து சுமார் 110 வருடங்கள் ஆன நிலையில் , கடந்த 1985 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டன .

அப்போதுமுதல் அட்லாண்டிக் கடலின் அடி ஆழத்தில் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை நீர்மூழ்கி கப்பல் உதவியுடன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்ககளையம் , இந்த கப்பல் மூழ்கியதற்கான காரணத்தையும் அறிய பல கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இது ஒரு புறம் இருக்க சமீபகாலமாக சில அரசு உரிமம் பெற்ற தனியார் நீர்மூழ்கி கப்பல்கள் சுற்றுலா பயணிகளை நீர்மூழ்கி கப்பல் மூலம்  கடலில் மூழ்கியுள்ள டைட்டனிக் கப்பலின் சிதைந்த பக்கங்களை சுற்றிக்காட்டும் பார்க்க சில கப்பல் நிறுவனங்கள்பணியிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த வகையில் கனடா நாட்டின் நியூபோல்ட்லேண்ட் மாகாணத்தில் இருந்து ஜூன்16 ஆம்  தேதி டைட்டன் என்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் அட்லாண்டிக் கடல் அடியில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட 5 சுற்றுலா பயணிகளுடன் அட்லாண்டிக் கடலில் இறங்கியது .

இதில் இங்கிலாந்து நாட்டின் பணக்காரர்களின் ஒருவரான ஹமிஷ் ஹார்டிங் (57), இங்கிலாந்து தொழிலதிபர் ஷஷாத் தாவூத் (48), இவரது மகன் மகன் சுலைமான் தாவூத் (19), பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கடற்படை அதிகாரி பால் ஹெண்ட்ரி(76), oceangate கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் (60) ஆகிய 5 பேர் பயணித்தனர்.

16 ஆம் தேதி பயணத்தை தொடங்கிய இந்த ஐந்து பேர் குழு கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, 18 ஆம்  தேதி இரவு நியூபவுண்ட்லேண்ட் கடற்பகுதியிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கடலுக்கடியில் oceangate titan நீர்மூழ்கி கப்பல் பயணித்தபோது ரேடார் தொடர்பில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

போலார் பிரின்ஸ் என்ற கப்பலில் இருந்து ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய oceangate titan நீர்மூழ்கி , ஆழ்கடலில் சுமார் 100 நிமிடத்திற்கும் மேலாக செங்குத்தாக பயணித்துக் கொண்டிருக்கும் போது  திடீரென நீர்முழ்கி கப்பலின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனால் அதிர்ந்துபோன அந்த நீர்மூழ்கி கப்பல் நிறுவன ஊழியர்கள் உடனடியாக அமெரிக்க மற்றும் கனடா நாட்டு கடற்படையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர் .

தகவலின் அடிப்படையில் கனடா மற்றும்  அமெரிக்க நாட்டின் கடற்படையினர் தொடர்பை இழந்த oceangate tittan நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈடுபட்டுள்ளனர்.

மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் 96 மணி நேரத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யும் திறன்கொண்டதாக வடிவைக்கப்பட்டுள்ள நிலையில் , நீர்முழ்கி கப்பல் மாயமாகி சுமார் 70 மணி நேரம் ஆகிவிட்டது.

கப்பலில் இன்னும் 26 மணி நேரத்திற்கும் குறைவான ஆக்சிஜன் விநியோகம் எஞ்சியுள்ள நிலையில் , நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஹமிஷ் ஹார்டிங் உற்பட 5 பேரின் நிலை என்ன என்பது பெரும் கேள்வி குறியாக இருக்கின்றது .

Share This Article
Leave a review