நாட்றம்பள்ளி அருகே ஒரு தலை காதல் காரணமாக முதலாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவியை தாய் மாமனே கழுத்தை அறுத்து கொலை செய்ததால் பரபரப்பு. தப்பி ஓடிய தாய் மாமனுக்கு போலீசார் வலை வீச்சு.
ஒருதலை காதல்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி அருந்ததியர் காலனி பகுதியில் வசிப்பவர் பெருமாள் ஜெயப்பிரதா இவருடைய மகள் ஜீவிதா (18).இவர் பர்கூர் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில் இவருடைய தாயின் சகோதரர் சரண்ராஜ் (30). ஜீவிதாவை ஒருதலைப் பட்சமாக காதலித்து வருவதாக தெரிகிறது.காதல் தொடர்பாக பல முறை ஜீவிதாவிடம் தனது காதலை தெரியப்படுத்தியிருக்கிறார் இருந்தும் ஜீவிதா அவருடைய காதலை ஏற்கவில்லை.

சரண்ராஜ் புகைப்பட கலைஞராகவும் ஓட்டுராகவும் பணிபுரிந்துவருகிறார்.இவரது அக்கள் மகள் ஜீவிதாவின் மீது சரண்ராஜிக்கு ஒரு தலை பட்சமாக காதல். வரும் இவர்காதலை தன்னுடைய அக்கா ஜெயப்பிரதாவிடம் தெரிவித்து,ஜீவிதாவை திருமணம் செய்து வைக்க ஒப்புதல் கேட்டதாகவும் கூறப்படுகிறது.ஆனால் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைதாகி இருந்த தன்னுடைய தம்பி சரண்ராஜ்க்கு மகளை திருமணம் செய்து வைக்க விரும்பாததால் அவரது அக்கா மறுத்துள்ளனர்.

கழுத்தை அறுத்து கொலை
இந்நிலையில் இன்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஜீவிதாவை அவருடைய வீட்டிற்கு அனுப்பாமல், அம்மா வீட்டில் இல்லை என்று கூறி அவருடைய பாட்டி சியாமளா வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு யாரும் இல்லாத சமயத்தில் மீண்டும் ஜீவிதாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.ஜீவிதா மறுக்கவே ஜீவிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார்.பின்னர் போலீசிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.அவரது தாய் மாமன் சரண்ராஜ்
சம்பவ இடத்திலேயே மெத்தை மீது ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜீவிதாவை கண்ட உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அங்கு வந்த வாணியம்பாடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நாற்றம்பள்ளி காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய சரண்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் ஜீவிதாவின் தாய் மற்றும் உறவினர்களிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு தலை காதலால் தாய் மாமனே அக்கா மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.