பெங்களுர் மூதாட்டியிடம் முகநூலில் பழகி அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட போவதாக மிரட்டி பணம் பறித்த கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்த மெக்கானிக்கல் இஞ்சினியரை கார்நாடக போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியை சேர்ந்தவர் அருள் மெக்கானிக்கல் இஞ்சினியரான இவருக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த ஷபிதா நாயக் என்ற 60-வயதான மூதாட்டியிடம் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முகநூலில் பழகிய இருவரும் ஒருவருக்கொருவர் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட நிலையில் அருள் அந்த மூதாட்டியிடம் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார் இதனால் பயந்த மூதாட்டி கூகுள் பே மூலம் 12-ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார் அதனை அருள் பெற்றுள்ளார்.
அடுத்தப்படியாக மார்பிங் செய்த புகைப்படங்களை கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி கூடுதலாக 50-ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஷபிதா நாயக் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஷபிதாநாயர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் புத்தூர் காவல் நிலையத்தில் பெண்மைக்கு களங்கம் விளைவித்து பெண்ணை மிரட்டி பணம் பறித்தது உட்பட 5-பிரிவுகன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில்,
நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதிக்கு வந்த கர்நாடக போலீசார் இரணியல் போலீசார் உதவியுடன் அருளை கைது செய்து பெங்களூர் அழைத்து சென்றனர்.