தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன்,62 வயதாகும் இவர் டீக்கடை நடத்தி வந்தார். இவருடைய கடைக்கு அருகில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளர்கள், டீ வாங்கி செல்வது வழக்கம்.
அப்படியாக, ஒரு நாள் 16 வயது சிறுமி ஒருவரும் டீ வாங்க வந்திருக்கிறார். இந்த சிறுமி இந்த டீ கடைக்கு அடிக்கடி வருவார் என தெரிகிறது. அப்படி வரும் சிறுமிக்கு, மகாதேவன் தின்பண்டங்கள் மற்றும் பணம் போன்றவற்றை கொடுத்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால், சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து, சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.இதனால் அதிர்சியடைந்தனர் பின்னர் பெற்றோர்கள் சிறுமியை அழைத்துச்சென்று பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மகாதேவனை கைது செய்து பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கு விசாரணை தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு முடிந்த நிலையில் நீதிபதி சுந்தர்ராஜன், மகாதேவனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து மகாதேவன் சிறையிலடைக்கப்பட்டார்.