குட்கா ஊழல் வழக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல்.அதிமுக முன்னாள் அமைச்சர்கள்அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கும் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது,

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016-ம்ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா கைப்பற்றப்பட்டது.அப்போது தமிழக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசு உயரதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப்படும் டைரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டபலர் ஊழல் சர்ச்சையில் சிக்கினர்.இந்த வழக்கில் இதுவரை மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணபாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா / மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை கோரியது.
மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.-யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால், ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் இருந்ததால், இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்து வந்தது.

இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்காக கூறி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று ஆளுநர் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குற்ற வழக்கில், நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இருவர் மீதும் விசாரணை நடத்த அனுமதி கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 12 இல் தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது என்றும் கடந்த நவம்பர் 13ஆம் தேதி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.