குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல்களை கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அடுத்த மாதம் தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாக ஏழுந்த புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சிபிஐ வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
குட்கா விற்பனை மூலமாக முறைக்கேடாக பெற்ற பணங்களை சட்டவிரோதமாக முதலீடுகள் செய்துள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா உள்பட 27 பேருக்கு எதிராகவும், 4 நிறுவனங்களுக்கு எதிராகவும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில் வளவன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐயின் கூடுதல் குற்றபத்திக்கை கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை, செப்டம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்