போலீசார் – மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கி சண்டை..!

2 Min Read

வயநாடு அருகே வனப்பகுதியில் போலீசார் மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. 2 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். மேலும் குண்டு காயங்களுடன் தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், கம்பமலை பகுதியில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் கடந்த செப்டம்பர் மாதம் மாவோயிஸ்டுகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து அங்கு நோட்டிஸ்களை ஒட்டி சென்றனர். இதனை அடுத்து கேரளா தண்டர்போல்ட் (மாவோயிஸ்டுகள் தடுப்பு பிரிவு) போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே வயநாடு மாவட்டம், மானந்தவாடி தாலுகா தலப்புழா பே ரிளாசப் பார்த்து கிராமத்தை சேர்ந்த அனீஸ். வாடகை கார் டிரைவரான இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அனிஸ் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.

போலீசார் – மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கி சண்டை

அப்போது துப்பாக்களுடன் 4 மாவோயிஸ்டுகள் வீட்டுக்குள் நுழைந்தனர். இதை கண்ட அனீஸ் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மாவோயிஸ்டுகள் டிரைவர் அனீஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து செல்போன்களை பறித்தனர். பின்னர் வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை வாங்கி சாப்பிட்டனர். அவரது வீட்டில் இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டைகளில் கட்டிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே டிரைவர் அனீஸ் வீட்டை கண்காணித்து வந்த கேரளா தண்டர்போல்ட் போலீசார் சுற்றி வளைத்தனர்.

தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு உடனடியாக சரணடையும்படி மாவோயிஸ்டுகளிடம் போலீசார் கூறினர். அதற்கு அவர்கள் மறுத்ததுடன், போலீசார் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டவாறு வீட்டை விட்டு தப்பிக்க முயன்றனர். மாவோயிஸ்டுகள் உன்னி மாயா, சந்துரு 2 பேரும் வீட்டு சமையல் அறையில் மறைந்து நின்று, போலீசாரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். மேலும் மாவோயிஸ்டுகளான கபனி தளம் பகுதியை சேர்ந்த லதா, சுந்தரி 2 பேரும் மற்றொரு பகுதியில் இருந்து போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

போலீசார் – மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கி சண்டை

இதனால் உஷார் அடைந்த போலீசாரம், சராசரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவோயிஸ்டுகளை பிடிக்க வந்த கமாண்டோ போலீசார் துப்பாக்கியால் எதிர் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகள் போலீசார் இடையே துப்பாக்கி சண்டை பயங்கரமாக நடந்தது. இந்த நிலையில் உன்னி மாயா, சந்துரு ஆகியோரே போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.

கைதான 2 பேரும் மலப்புரம் அரிக்கோடு பகுதியில் உள்ள தண்டர்போல்ட் போலீசாரின் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரிடம் இருந்து 2 ஏ கே 47 மற்றும் ஒரு எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் அனீஸ் வீட்டின் ஜன்னல், கண்ணாடிகள், கதவுகள் துப்பாக்கி குண்டுகளால் சேதம் அடைந்தது.

Share This Article
Leave a review