தமிழர்களின் கலைகள் மிகவும் பழமை வாய்ந்தது. குறிப்பாக சிலம்பம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மியடி என நீண்டு கொண்டே போகும் கலைகள்.
தற்போது உள்ளது போல அக்காலத்தில் பொழுதுபோக்கு சாதனங்கள் பெருமளவு இல்லாததால் கலைகளை ஊக்குவிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் முறைப்படுத்தி வைத்திருந்தனர் தமிழர்கள். அந்த வகையில் பல கலைகள் அழிந்து போவதை நாம் அறிந்து வருகிறோம். இன்னமும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் கலைகள் இருந்து வருகிறது. அந்த கலைகளில் மிக முக்கியமானது கும்மியடி ஆட்டம்.

பழனி அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் கடந்த சில வாரங்களாக நாட்டுப்புற கலையான கும்மி நடனத்தை கற்று வந்தனர். இந்த நிலையில்
சக்தி கலை குழு சார்பில் வயலூர் கிராமத்தில் கும்மி நடனம் அரேங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நமது பாரம்பரிய கும்மி நடனத்தை உற்சாகமாக ஆடினர். இசைக்கு ஏற்றபடி கிராமிய பாடல் பாடி மேளஇசைக்கு ஏற்ப கும்மி நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.