பணத்திற்காக மூதாட்டி கொலை , பேத்தி கைது .

0
82
குற்றவாளி - ஜெயலட்சுமி (28)

மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில், அவரது பேத்தியே கொலை செய்தது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி( 55). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார்.

மகள்களுக்கு திருமணாகி தனித்தனியே சென்று விட்டனர். இந்நிலையில், மூதாட்டி செல்வமணி தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். கடந்த 24ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று வருவதாக அக்கம் பக்கத்தினரிடம் செல்வமணி கூறியுள்ளார். அதன் பிறகு நேற்று வரை செல்வமணி வீடு பூட்டி கிடந்துள்ளது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர், செல்வமணி மகள் ராமலட்சுமிக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து ராஜலட்சுமி  மாலை வீட்டிற்குச் சென்று பார்த்த போது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. மேலும், வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது.பின்னர் ,அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது செல்வமணியை பித்தளை குவளையில் தலை கீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து பாபநாசம் காவல்துறை தகவலறிந்து செல்வமணி உடலை மீட்டு, விசாரணை நடத்தினர். தொடர்ந்து குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, செல்வமணியின் பேத்தியான வீரசிங்கம்பேட்டை ரமேஷ் மனைவி ஜெயலட்சுமி (28) என்பவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.

அவரிடமிருந்து பல்வேறு தடயங்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து போலீசார் ஜெயலட்சுமியை கைது செய்தனர்.போலீசார் விசாரணையில், செல்வமணி மகள் கீதா வெளிநாட்டில் உள்ளார். கீதா தனது தாய்க்கு  மாதந்தோறும் பணம் அனுப்பி வந்துள்ளார். இதனையறிந்த, கீதாவின் மகளான ஜெயலட்சுமி, தனது பாட்டி செல்வமணியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதில், இருவருக்கும் கடந்த 23ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி தனது பாட்டி செல்வமணியை கீழ தள்ளியுள்ளார். இதில் செல்வமணியின் தலையில் ரத்தம் வந்துள்ளது. இருப்பினும், ஜெயலட்சுமி செல்வமணியை அவரது சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்து, பித்தளை குவளைக்குள் அமுக்கி வைத்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயலட்சுமி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here