புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில்
பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சராக இருந்த பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். முதலமைச்சர் ரங்கசாமி சந்திரபிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு திருமுருகனை அமைச்சராக்க துணைநிலை ஆளுநரிடம் கடிதம் அளித்த நிலையில், அதற்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டது.

ரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநர்
முதல்வர் ரங்கசாமி சந்திரபிரியங்காவை கலந்தாலோசிக்காமல் அவருடை பதவியை பறிப்பதற்காக துணைநிலை ஆளுநர் மூலமாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி, பெண் அமைச்சர் ராஜினாமா தொடர்பாக முதலமைச்சருக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்களை வெளியில் சொல்வது, ரகசியகாப்பு பிரமாணத்திற்கு எதிரானது, முரணானது. ஆகவே தார்மீக பொறுப்பேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு உடனே அனுப்ப வேண்டும்.

முதலமைச்சர் ரங்கசாமிதான் முதல் குற்றவாளி
அமைச்சர் சந்திரபிரியங்கா ராஜினாமா குறித்து முதலமைச்சர் ரங்கசாமி இதுவரை வாய் திறக்கவில்லை. அவரது பதவி விலகல் இதுவரை மர்மமாகவே உள்ளது. சந்திரபிரியங்கா ஜாதி மற்றும் பாலின ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக மன உளைச்சலுடன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு புதுச்சேரி அரசிடமிருந்து யாரும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமிதான் முதல் குற்றவாளி. ஒன்றியத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட ஆணையம் தாமாக முன்வந்து முதல்வர் ரங்கசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி பொதுப்பணித்துறையில் அனைத்து பணிகளும் 30 சதவீதம் கமிஷன் பெற்று நடைபெறுகிறது. இந்த ஊழலில் முதல்வர் மற்றும் அமைச்சருக்கு தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், சி.பி.ஐ, அமலாக்த்துறை, வருமானவரித்துறையினர் பா.ஜ.க வின் பொறுப்பாளர்கள் போல் செயல்ப்படுகின்றனர். எதிர்கட்சிகளை மிரட்டுவதற்காகதான் தமிழகத்தில் அமலாகத்துறை போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது என குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா ராஜினாமா தற்போது புதுச்சேரி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,சாதி ரீதியாக தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை கடிதமாக விளக்கியுள்ளார் அந்த பெண் அமைச்சர்.நீதி மன்றம் தாமாக மின் வந்து விசாரிக்க வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு.