ஆளுநருக்கு எதிரான தீர்மானம்..கிருஷ்ணசாமி விமர்சனம்!

1 Min Read
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

தமிழக சட்டமன்ற விதிகளை தளர்த்தி ஆளுநருக்கு எதிரான விமர்சனங்களை அனுமதித்தது தவறான முன்னுதாரணமாகும். இதன் மூலம் திமுக வரலாற்று பிழை செய்துள்ளது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

- Advertisement -
Ad imageAd image

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி ஆளுநருக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஆளுநர்கள் ‘வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல’, அவர்களும் ஆட்சியின் அங்கம் என்பதை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் ஆளுநர் ஆர்,என். ரவி அவர்களின் செயல்பாட்டை ஜீரணித்துக்கொள்ள திமுகவினரால் இயலவில்லை.

தமிழக சட்டமன்ற விதிகளை தளர்த்தி ஆளுநருக்கு எதிரான விமர்சனங்களை அனுமதித்தது தவறான முன்னுதாரணமாகும். இதன் மூலம் திமுக வரலாற்று பிழை செய்துள்ளது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில்.

மாநில ஆளுநர்கள் குறித்து சட்டமன்றங்களில் விமர்சனமோ, விவாதமோ மேற்கொள்ளக்கூடாது என்பது சட்டமன்ற விதி. அந்த விதியை தளர்த்தி, இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் விவாதங்களும் திமுக அரசால் வைக்கப்பட்டுள்ளன

ஆளுநர்கள் ‘வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல’, அவர்களும் ஆட்சியின் அங்கம் என்பதை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் ஆளுநர் ரவியின் செயல்பாட்டை ஜீரணித்துக்கொள்ள திமுகவினரால் இயலவில்லை. மோடியை நேரடியாக எதிர்க்கும் துணிவு இல்லாததால் ‘ஊருக்கு இழைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்பதற்கு இணங்க ஆளுநரை இலக்காக்கி மோடி எதிர்ப்பாளர்களாக தங்களை சித்தரித்துக் கொள்கிறார்கள்.

இந்திய அரசியல் சாசனம் எவருக்கும் சர்வ அதிகாரத்தை வழங்கவில்லை! எல்லா அதிகார அமைப்புக்களும் ‘check and balance’ என்ற உயரிய அடிப்படை தத்துவத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன. தமிழக சட்டமன்ற விதிகளை தளர்த்தி ஆளுநருக்கு எதிரான விமர்சனங்களை அனுமதித்தது தவறான முன்னுதாரணமாகும். இதன் மூலம் திமுக வரலாற்று பிழை செய்துள்ளது

இவ்வாறு, அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்

Share This Article
Leave a review