தலையங்கம்…
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் ஆளுநர் பேச்சு. ஆளுநர் அரசியல்வாதியை போல நடந்து கொள்வதற்கு இதுவும் ஒரு உதாரணமாக அமைந்து விட்டது. திருவண்ணாமலை கிரிவலம் சென்றால் கிரிவலம் செல்ல வேண்டும், பிறகு அங்கு இருக்கிற கடவுளை தரிசிக்க வேண்டும், அதை விடுத்து அசைவ உணவகங்கள் இருக்கக் கூடாது, இலைகளில் தான் சாப்பிட வேண்டும், இது எல்லாம் ஆளுநர் சொல்லக்கூடாது.
நீட் தேர்வு வேண்டாம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. அதில் ஒரு காரணம் தேர்வு முறை. அந்த மாற்றங்கள் தான் மாணவர்களுக்கு கடினமாக இருக்கிறது என்று தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என்கிற நிலைப்பாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள் அந்த தேர்வு முறையிலேயே மாற்றத்தை மாற்றி அமைக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. அதை விட்டு விட்டு நீட் தேர்வு விலக்கு அளிப்பது முடியாது, ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்றெல்லாம் கருத்து சொல்லுவது கவர்னருக்கு அழகல்ல. மெக்காலே கல்வித் திட்டம் நமக்கான கல்வி திட்டமாக இருக்காத நிலையில் தான் சமச்சீர் கல்வியை உருவாக்கினோம். அதுபோல தான் நீட் தேர்வும்.
தற்போதையல்லாம் கவர்னர்கள் கருத்து சொல்பவர்களாக மாறிவிடுவதை பார்க்க முடிகிறது தமிழிசை சௌந்தரராஜன், சி பி ராதாகிருஷ்ணன், என்.ஆர்.ரவி என பட்டியல் தொடர்கிறது. எனவே கவர்னர்கள் அவர்களுக்கான வேலைகளை செய்வதில் அக்கறை செலுத்த வேண்டும். மாறாக அரசியல் செய்யக்கூடாது என்பதற்கு இது போன்ற நிறைய உதாரணங்களை சொல்ல முடியும்.