மயிலம் பகுதியில் மயிலாடும்பாறை ,விநாயகர் கோயில் ,ஜே ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் இனமக்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியரிடம் இதற்கு முன்னதாக புகார் மனு அளித்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆகையால் நேற்று பழங்குடி இருளர் இன மக்கள் சார் ஆட்சியிர் அலுவலகத்தில் ,சார் ஆட்சியிர் ரவி தேஜாவிடம் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் ,மயிலாடும்பாறை ,பிள்ளையார் கோயில் ,ஜே ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் மக்கள் வருகிறோம்.இங்குள்ள சுடுகாட்டுக்கு அருகே உள்ள நிலத்தில் தனிநபர் ஒருவர் வீட்டுமனை போட்டு விற்பனை செய்து வருகிறார்.அவர் புதிதாக மனைப்பிரிவு ஏற்படுத்தும்போது பழங்குடி இருளர் இன மக்களின் சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்து மனைப்பிரிவை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் கடந்த 20ம் தேதியன்று அதேபகுதியில் உயிரிழந்த கண்ணம்மாள் என்பவரின் உடலை செய்தோம்.அந்த சமாதியினை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளி ,தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்.இது தொடர்பாக வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்து,சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறையினர் ஆக்கிரமிப்புதாரரை அழைத்து,இது பழங்குடி இருளர் இன மக்களின் சுடுகாடு, ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என அறிவுறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
ஆகையால் நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வரும் சுடுகாட்டை மீட்டு, சுடுகாட்டு பாதை,ஏரி கொட்டகை,சுற்றுசுவர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.