மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு வழக்கறிஞருக்கு இழப்பீடு தொகையை -தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கியது.

1 Min Read

சென்னை கொரட்டூர் பாடி யாதவா தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(57). சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இவரது மனைவி அம்பத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றியவர். இந்நிலையில் வழக்கறிஞர் சம்பத்குமார் தினமும் கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோயிலைச் சுற்றி நடைபயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த சம்பத்குமார் கொரட்டூர், ஜம்புகேஸ்வரர் பகுதியில் தினமும் நடைபயிற்ச்சி மேற்கொண்டு வந்தார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி  நடைபயிற்ச்சி சென்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சம்பத் குமார் என்பவருக்கு இழப்பீடு தொகையாக 5 லட்சம் ரூபாயை வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கியது.

இந்த மரணம் தொடர்பாக கொரட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த தன்னுடைய கணவருக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி அவருடைய மனைவி சுந்தரா தேவி மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியம் வழக்கு விசாரணையின் போது 5 லட்சத்திற்கான வரைவு காசோலையை சம்பத்குமார் தரப்பிற்கு வழங்கியது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி அதிகமான இழப்பீடு தொகை வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டுள்ளதால், 2 வாரத்தில் மாவட்ட சட்டபணி ஆணையத்திடம் மனு அளிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியும், அந்த மனு மீது 4 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Share This Article
Leave a review