அரசு பள்ளியை தூய்மை படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது – கோவை மாநகராட்சி நிர்வாகம்..!

2 Min Read

கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக அலங்கோலமான அரசு பள்ளியை தற்பொழுது வரை தூய்மை படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகம். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாநகராட்சி 82 வது வார்டு மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியின் அவல நிலை, பொதுமக்கள் பேட்டி.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை அருகே உள்ள ஈஸ்வரன் வீதி என்ற பகுதியில் அமைந்துள்ளது. மாநகராட்சி அரசு துவக்கப்பள்ளி கோவை மாநகராட்சி 82 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் இந்த அரசு பள்ளியின் அவல நிலையை தான் நாம் பார்த்து வருகிறோம். கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பெய்து வரும் பரவலான மழையின் காரணமாக வீதிகளிலும், சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீரும் புகுந்து குளம் போல் காட்சியளித்தது.

அரசு பள்ளியை தூய்மை படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது கோவை மாநகராட்சி நிர்வாகம்

அதே நேரத்தில் கோவை மாநகராட்சி அரசு துவக்கப்பள்ளியில் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடாமல் அலட்சியம் காட்டி வரும் கோவை மாநகராட்சி செயல்பாடால் தற்பொழுது அந்த அரசு துவக்கப்பள்ளி அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாளை திங்கட்கிழமை பள்ளி திறக்கும் நிலையில், பள்ளி மாணவர்கள் பள்ளிக்குள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மழை நீரும் கழிவு நீரும் கலந்து தேங்கி, அரசு பள்ளியில் சுகாதாரமற்ற நிலையில் நோய் தொற்று பரவும் விதமாக காட்சியளிப்பது என அப்பகுதியில் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனை கண்ட அப்பகுதியில் மக்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை

கோவை அரசு பள்ளி மாணவர்களின் நலனை பெரிதும் கருதி, கோவை மாநகராட்சி உடனடியாக அலட்சியம் காட்டாமல், கோவையில் கனமழையின் காரணமாக அந்த அரசு பள்ளியில் தேங்கி நிற்கும் கழிவு நீரும், மழை நீரையும் கலந்து இருப்பதால் அதனை தூய்மைப்படுத்தி சுகாதாரமான சூழ்நிலையில் மாணவர்கள் படிக்கக்கூடிய சூழ்நிலையை உடனடியாக உருவாக்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். நோய் தொற்றில் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களினுடைய வேண்டுகோளாக இருக்கின்றது.

Share This Article
Leave a review