- மதுரையைச் சேர்ந்த கோகுல் அபிமன்யு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின் போது சாட்சி அளிப்பவரின் சாதி மற்றும் மதம் குறிப்பிடப்படுகிறது. இதனை கீழமை நீதிமன்றம் ஒரு நடைமுறையாகவே கொண்டுள்ளது.
இதனால் நீதிபதியும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்ட நபரின் சாதி மற்றும் மதம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது. சாட்சி அளிக்கும் நபரின் சாதி மற்றும் மத அடையாளங்கள் இன்றியே அந்த வழக்கை கையாளலாம். சாதிக்கும், மதத்திற்கும் அதில் எவ்விதமான பங்கும் இல்லை.
உச்சநீதிமன்றமும் சாதி மற்றும் மத அடையாளத்தை சேகரிக்க தேவையில்லை என குறிப்பிட்டும், இந்த நடைமுறை தொடர்கிறது. ஆகவே கீழமை நீதிமன்றங்கள் வாக்குமூலம் பெறும்போது, அவர்களின் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட தேவையில்லை என உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, ” சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதி மற்றும் நிர்வாகப் பதிவாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.