நாட்டை என்னிடம் கொடுங்க. மணிப்பூர் கலவரத்தை அரை மணி நேரத்தில நிறுத்துறேன்: சீமான்

2 Min Read
சீமான்

மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.அரசும் காவல்துறையும் அதை தடுக்க பல முயற்சி எடுத்து வருகின்றது.இருந்தாலும் அதை கட்டுப்படுத்த முடிய வில்லை.அரசும் தொடர்ந்து போராடி வருகிறது.இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர்களும் அந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் நகைச்சுவை கண்டண்டாக மாறியுள்ளது.அப்படி என்ன பேசினார் சீமான்.

என்னிடம் நாட்டை கொடுங்க… மணிப்பூர்ல நடக்கிற கலவரத்தை அரை மணி நேரத்தில் நிறுத்துகிறேன் என சீமான் தெரிவித்தார்.இது தான் தற்போது நகைச்சுவை கண்டண்டாக மாறியுள்ளது. தேனி மாவட்டம், போடியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: விவசாயத்தை அரசு வேலையாக மாற்றுவேன். எனது கட்சி, எனது கொள்கை எப்போதும் மாறுபட்டது. என் வழி தனி வழி… வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். ஒரே தேசம், ஒரே கொள்கை என்பவர்கள், காவிரியில் நீர் தர மறுப்பது ஏன்? முல்லை பெரியாறு பிரச்னைகளை ஏன் சரி செய்ய முடியவில்லை? பொது சிவில் சட்டம் கொண்டு வருவதால் என்ன பயன்? கல்வி, மருத்துவம், பொருளாதாரத்தில் வளர்ச்சி போன்ற எவ்வளவோ விஷயங்களில் கவனம் செலுத்தாமல், ஒரே சட்டம் கொண்டு வருவதாக பேசுகின்றனர்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்கின்றனர், ஒரே சுடுகாடு இருக்கிறதா? ஒரே குளம், ஒரே கோயில் இருக்கிறதா? கோயிலுக்குள் நாட்டின் ஜனாதிபதியை உள்ளே விட மறுக்கின்றனர். இதெல்லாம் இந்த சட்டத்தால் மாறும் என ஒரு மாதிரியை காட்டுங்கள். பிறகு விவாதிப்போம். வெளிநாட்டில் இதெல்லாம் இருப்பதாக கூறினால், வெளிநாடுகளை போன்று தரமான கல்வியை அனைவருக்கும் இலவசமாக கொடுப்பீர்களா? இருக்கும் நிலையிலேயே பல மாற்றங்களை செய்ய முடியும் எனும்போது, சட்டத் திருத்தத்தால் ஏன் செய்ய வேண்டும்?

நடிகர் விஜ்யுடன் கூட்டணி பேசுவீர்களா? என்ற கேள்விக்கு ஏன் இதை விஜையிடம் கேட்கவில்லை.என் கொள்கைக்கும் நான் ஏற்றிருக்கும் தலைவர் பிரபாகரனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?நான் வைத்துள்ள திட்டங்களுக்கு எந்த கட்சியாவது ஆதரவு தருமா? என கேள்வி எழுப்பினார்.

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே தொடங்கிய பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அரசுகள் முன்வரவில்லை.மணிப்பூரில் முதல்வருக்கும், பிரதமருக்கும் தெரியாமல் கலவரம் நடக்க வாய்ப்பில்லை. என்னிடம் நாட்டைக் கொடுங்க.. அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துவேன். இவ்வாறு கூறினார்.

Share This Article
Leave a review