தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார் .
நாடாளமன்றலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது . பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கிய முதல் பட்ஜெட் அமர்வு ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி குழுமத்தை மோசடி குழுமம் என்று விமர்சித்தது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர் . இதனால் ஆளும் பாஜக அரசு செய்வதறியாது நாடாளுமன்ற இரு அவைகளிலும் முழி பிதுங்கி நின்றது .
இந்நிலையில் ஆளும் பாஜக அரசின் எம்பி -கள் எதிர்க்கட்சியினரை ஆப் செய்யும் விதமாக ராகுல் காந்தி அன்மை இங்கிலாந்து பயணத்தின் போதி இந்திய அரசின் நன்மதிப்பைச் சீர்குலைக்கும் விதமாகப் பேசியுள்ளதாகவும் அதற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இங்கிலாந்தில் என்ன பேசினார் ராகுல் காந்தி ?
சமீபத்தில் ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடம் உரையாற்றிய போது, இந்திய ஜனநாயகம் ஆளும் பாஜக அரசால் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. தன்னுடைய தொலைப்பேசியை பொகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் கண்காணிக்கப் படுவதாகவும் மேலும் இந்திய ஜனநாயகம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்திருந்தார் .
பட்ஜெட் கூட்டத்தொடரின் 7வது நாளான இன்றும் பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தியின் கருத்துக்களைக் குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் ஹிண்டன்பர்க் அறிக்கையை மேற்கோள் காட்டி அதானி குழும விவகாரம் குறித்து விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வந்ததால் பாராளுமன்றம் இன்றும் முடங்கியுள்ளது .

இதனிடையே தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக நான் இந்திய ஜனநாயகம் குறித்து தவறாகப் பேசவில்லை. எனக் கூறி, அதற்கான விளக்கத்தை அளிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என ராகுல்காந்தி, சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் மீண்டும் வாய்ப்பு வழங்க மக்களவை சபாநாயகருக்குக் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.