காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த விவகாரத்தில், காதலன் உள்ளிட்ட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மரகதம் என்பவரின் மகள் ஷாலினி, அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவரை காதலித்து வந்தார்.
இந்நிலையில் காதலன் அருணின் தவறான நடவடிக்கைகளை பிடிக்காத பெற்றோர், ஷாலினியின் காதலை ஏற்க மறுத்தனர்.
இதன்பின் பெற்றோரின் அறிவுறுத்தல் படி ஷாலினி அருணுடன் பேசுவதையும், பார்ப்பதையும் நிறுத்திக் கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 24 ம் தேதி, தன் நண்பர் ஈஸ்வரனை அழைத்து சென்று ஷாலினியை ஆபாச வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த காதலி ஷாலினி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஷாலினியின் தாயார் மரகதம் அளித்த புகாரின் பெயரில் ஆர்.கே நகர் போலிசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அருண் மற்றும் அவரின் நண்பர் ஈஸ்வரனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கை அல்லி குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி விசாரித்து, அருண் மற்றும் அவருடைய நண்பர் ஈஸ்வரன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/a-petition-has-been-filed-to-ban-the-release-of-tangalan-in-od/
அபராத தொகையில் 20ஆயிரம் ரூபாயை ஷாலினியின் தாயாருக்கு வழங்க உத்தரவிட்டார். மேலும் கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரைந்தார்.