ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை திரையரங்கில் பார்த்து பரவசமடைந்தனர்.

1 Min Read
  • கும்பகோணத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை திரையரங்கில் பார்த்து பரவசமடைந்தனர். ரஜினிகாந்துக்கு 70 வயதா என கேட்டு ஆச்சரியமடைந்த அவர்கள், இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சியாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாக கூறி புருவத்தை உயர்த்தினர்.

ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் 10ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மூன்று திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் கும்பகோணத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 15 பேர் சுற்றுலா வழிகாட்டியிடம் ரஜினிகாந்தின் வேட்டையின் திரைப்படத்தை காண விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கும்பகோணத்தில் உள்ள கார்த்திக் சினிமாஸ் திரையரங்கில் மதியம் 2.30 மணி காட்சிக்கு சுற்றுலா வழிகாட்டி அழைத்து வந்துள்ளார். திரைப்படம் முடிந்து உற்சாகத்துடன் சத்தமிட்டபடி வெளியே வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணிகளை ரஜினி ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ஊழியர்கள் சால்வை அணிவித்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/syed-was-seriously-injured-in-a-head-on-collision-with-a-two-wheeler-and-died/

அப்போது பேட்டியளித்த ஜெர்மன் நாட்டு பெண் சுற்றுலா பயணி: ரஜினிகாந்த்துக்கு 70 வயதா என கேட்டு ஆச்சரியமடைந்தார், இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சியாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாக கூறிய அவர், திரையரங்கில் ரஜினி படம் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்ததாகவும் ஆனால், சவுண்ட் அதிகமாகவும் இருந்தாகவும் கூறி ரஜினியின் ஸ்டைலை செய்து உற்சாகமடைந்தார்.

Share This Article
Leave a review