இந்த செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின் மீண்டும் தேதி மாற்றப்பட்டு ஏப்ரல் 16ல் (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநிலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் அழைப்பு வழங்கப்பட்டு தற்போது ஏறத்தாழ அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. எம்.ஜி.ஆரால் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி தொண்டர்களின் பேராதரவோடு தொடங்கப்பட்ட அதிமுக, அரை நூற்றாண்டைக் கடந்து இந்திய அரசியல் களத்தில் வீறுநடை போட்டு வருகிறது. இதில், சுமார் 28 ஆண்டு காலம் கழகப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, இந்திய திருநாடே வியக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டி, ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கினார் ஜெயலலிதா.

ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கமே, சாமானிய மக்களின் கரங்களில் அதிகாரத்தைக் கொண்டு சேர்ப்பது தான். அண்ணா அந்த உயரிய லட்சியத்தோடுதான் இயக்கம் கண்டார்கள். அவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எளிய சாமானிய மக்களில் பலரை அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பதவிகளில் அமரச் செய்து, ஜனநாயகத்தின் மாண்புகளைக் காத்து நின்றார்கள். அவர்கள் வழியிலேயே செயல்பட்டு, கழகத்தின் மூன்றாம் தலைமுறை அரசியல் தலைமையைதேர்ந்தெடுத்திருக்கிறது.
கழகப் பொதுச் செயலாளர் என்கிற உயர் பொறுப்பை அடைந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக சார்பில், வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் மாநாட்டை வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் நடத்துவது என இந்தச் செயற்குழு தீர்மானிக்கிறது. அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பிக்கும் பணியிலும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணியிலும், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முனைப்போடு ஈடுபட வேண்டும்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, கழகத்தின் சார்பில் பூத் கமிட்டிகளை விரைந்து அமைக்க வேண்டும். இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சி, அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் அளவுக்கு வென்று காட்டி, அதிமுகவிற்கு வரலாற்றுச் சாதனையைப் பெற்றுத் தர வேண்டும்.
திமுக ஆட்சியின் அராஜகங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். கழக நிர்வாகிகள் மீது, விடியா அரசால் தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு வருவதற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது’’என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.