திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே மருத்துவ நகரைச் சேர்ந்தவர் சின்ன காளை என்பவர் ஆவார்.அவரது மகன் முத்தையா வயது (45) இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவருக்கும் இடையே இட பிரச்சனை தகராறு நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
அப்போழுது இவர்கள் சண்டை போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்தது.இவர்கள் இருவரும் இடையே அடிக்கடி காவல் நிலையத்தில் பஞ்சாயத்து செய்து கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தனர். கடந்த மாதம் கொடைக்கானல் சாலையில் புற்றுக்கோவில் என்ற இடத்தில் முத்தையா நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆண்டிச்சாமி அவரது மகன் தீபக்குமார் (24) என்பவர் அதே பகுதியை சேர்ந்த அவனது நண்பர்களான முனிச்செல்வம் வயது (30), பாண்டித்துரை வயது (25) மற்றும் பழனி சுப்பிரமணியபுரம் சாலை பகுதியை சேர்ந்த விஜய் வயது (26), ராமநாதன்நகரை சேர்ந்த சபரிநாதன் வயது (25) ஆகியோர் ஐந்து பேரும் சேர்ந்து கொடைக்கானல் சாலையில் புற்றுக்கோவில் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த முத்தையாவை கீழே தள்ளிவிட்டு கத்தியால் குத்தி சரமாரியாக கழுத்தை அறுத்து, கொலை செய்துவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பினர்.
ஆண்டிச்சாமி மகனும் அவனது நண்பர்களான நான்கு பேரையும் அழைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். காவல் துறையினர் தலைமறைவான குற்றவாளியான ஐந்து பேரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த காவல் துறையினர் குற்றவாளி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினர் ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆண்டிச்சாமி உள்பட 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன், கலெக்டர் பூங்கொடிக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து ஆண்டிச்சாமி உள்பட 6 பேரையும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.