- பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறுநாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
விழாவின் உச்சகட்டமாக நடைபெறும் சூரசம்ஹார விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பட்டாடையில் அலங்கரிக்கப்பட்ட முருகபெருமானுக்கும் வள்ளி தெய்வானை தாயாருக்கும் சாஸ்திர சம்பிரதாயப்படி சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் முன்னிலையில் வள்ளி தேவிக்கும் தெய்வானை தேவிக்கும் ஆகம முறைப்படி மங்கலநாண் சூட்டப்பட்டது. தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் நடந்தேறியது. திருக்கல்யாணத்தின் நிறைவாக முருகப்பெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்குளிர கண்டு வணங்கினர்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/chief-minister-stalin-is-going-to-virudhunagar-today-2-day-tour-participation-in-vehicle-rally/
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.