ஜி20 மக்கள் பங்கேற்பு நிகழ்வின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியால், திருநெல்வேலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழா நடத்தப்பட்டது.
2023 ஜூன் 12 அன்று நடைபெற்ற இந்த விழாவை இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் திரு டி கிரண் குமார் தொடங்கிவைத்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் தூய்மையான பணநோட்டு அமலாக்க குறிக்கோளின் படி நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பல்வேறு மதிப்பில் உள்ள நாணயங்கள் மற்றும் பணநோட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த விழாவின் போது அழுக்கேறிய மற்றும் கிழிந்த பணநோட்டுகள் வங்கிக்கிளை மூலம் மாற்றி வழங்கப்பட்டன. இந்த விழாவில் நூற்றுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
ஜி20 வணிக நடைமுறை பற்றி பரவலான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு தொப்பிகளும் டி-சர்ட்களும் விநியோகிக்கப்பட்டன.