காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நான்கு பசுமாடுகள் உயிரிழப்பு. அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பசுவின் சிறப்பியல்புகளான : பொன்னுக்கும் பொருளுக்கும் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன. கால் நடைகளே ஒருவரது பொருளாதார மதிப்பீட்டிற்கு அளவு கோலாக இருந்தது. இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம் . தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.

இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்து போன பசுவின் கன்று குட்டி அம்மா அம்மா என்று பசுவை சுற்றி வந்தது.பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு மாடுகளை வளர்ப்பவர்கள் சொந்தமான வீட்டு இடத்தில் கொட்டகை அமைத்து பராமரிக்காமல் சாலைகளில் விட்டு விடுகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் அமர்ந்து கொண்டும் , திடிர் திடீர் என பசுமாடுகள் சாலையை கடப்பதும் என்ற நிலையில் வாகன ஓட்டிகளிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் அருகே சாலையில் கூடி இருந்த பசுமாடுகள் மீது திடிரென்று அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்த நான்கு பசு மாடுகளில் ஒரு பசு மாட்டின் கன்று இறந்து போன தன் தாய் பசுவை சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்து அம்மா அம்மா என்று அழைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நெடுஞ்சாலைகளில் இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடந்தும் கூட மாவட்ட நிர்வாகமோ அல்லது மாடு வளர்ப்பவர்களோ நடந்த சம்பவங்கள் பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.