பஞ்சாப் துப்பாக்கிச் சூடு : சேலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உற்பட நான்கு வீரர்கள் பலி .

1 Min Read
பதிண்டா ராணுவ முகாம்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாமில் ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுடும் சத்தம் கேட்டது. உள்ளே பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே, ராணுவத்தின் அதிவிரைவுப்படை முடுக்கி விடப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

அப்படையினர் முகாமுக்குள் நுழைந்தனர். முகாமை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், அதிவிரைவு படை முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர் .அங்குச் சேதங்களை ஆய்வு மேற்கொண்ட அதிவிரைவு படையினர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், 4 ராணுவ வீரர்களின் சடலத்தை மீட்டனர் .

அவர்கள் பீரங்கி படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது . அவர்கள் பெயர்கள் சாகர் பண்ணே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரிய வந்தது. உணவு கூடத்துக்குப் பின்னால் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் ராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளது .


இதில் இறந்தவர்களில் ஒருவரான கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் அருகே  மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி நெசவுத் தொழிலாளி ஆவார். ராணுவ வீரரின் தாயார் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
திருமணம் ஆகாத நிலையில், பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட கமலேஷ் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டுத் திரும்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

Share This Article
Leave a review