சிபிஐயால் பதியபட்ட வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி (ஐ.ஜி) பொன்மாணிக்கவேல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்.

2 Min Read
  • சிலை கடத்தல் விவகாரம் சிபிஐயால் பதியபட்ட வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி (ஐ.ஜி) பொன்மாணிக்கவேல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்.
  • சிபிஐ தரப்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு பொன் மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்- சிபிஐ தரப்பில் வாதம்.
  • பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதியப்பட்ட வழக்கு ஜாமீன் வழங்கக் கூடியதா? அல்லது ஜாமினில் விடுவிக்க முடியாததா நீதிபதி கேள்வி.
  • சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி முன்ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக உத்தரவு.

அதில் நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்கை டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு  விசாரணை மேற்கொண்டு  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

- Advertisement -
Ad imageAd image

 

ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல. சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது.

இது என் மீதான நன்மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி பாரத சக்கரவர்த்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனுதாரர் முன்னாள் காவல்துறை மண்டல தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் இவருடைய பணிக்காலத்தில் பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் மனுதாரர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை , அதற்கான முகாந்திரமும் இல்லை எனவே முன்ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன்.
மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

முன்ஜாமின் வழங்கினால் வழக்கின் சாட்சியங்களை கலைக்க நேரிடும் எனவே முன்ஜாமின் வணங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கில் பொன் மாணிக்கவேல் மீது பதியபட்டுள்ள வழக்கு ஜாமினில் விடுவிக்கக் கூடிய பிரிவா அல்லது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவா என்பது குறித்து விளக்கம் தேவை எனவே அது சம்பந்தமான ஆவணங்களை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Share This Article
Leave a review