தேவர் குரு பூஜை
வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொண்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவருடைய குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடை பெற உள்ளது.வழக்கமாக இந்த விழாவில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்வது வழக்கம். இந்த தேவர் குரு பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து விமான மூலம் மதுரைக்கு வந்து மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக செல்ல உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வரவேற்பு வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கக்கூடிய செய்தியாளர் அரங்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கும் கட்சிகாரர்களுக்கும் பெரும் அதிர்சியை ஏற்படுத்தினார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்த அதிர்சியை அதிமுக வினர் எதிர்பார்க்கவே இல்லை.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
முத்துராமலிங்க தேவரின் புகழ் குறித்து பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடர்ந்து பேசிய அவர்.
தங்க கவசம்
அதிமுக காலகட்டத்தில் வழங்கப்பட்ட தங்க கவசம் அணிந்து தெய்வமாக வீட்டில் இருந்து அருள் பாலிக்கக் கூடிய முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் வருகை தந்து மரியாதை செய்ய உள்ளார்.
ரத்த கையொப்பம்
இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த வேண்டும்.இந்த நிலையில் இரத்த உறவை அழைக்கும் வகையில் அதிமுக நிர்வாகிகள் தங்கள் ரத்தத்தினால் கையொப்பமிட்டு வரும் முகாமை துவக்கி வைக்கிறேன் என்றார்.அதிர்ச்சி அடைந்தனர் நிர்வாகிகள்.இது என்ன பிரமாதாம் இதவிட ஸ்பெஷல் அயிட்டம் ஒன்னு இருக்கு என்று யாரும் எதிர்பார்கவில்லை.அது என்ன பார்க்கலாம்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது பசும்பொன் வரக்கூடிய அனைத்து சாதிய தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எளிதில் வந்து சேர கூடிய வண்ணம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததைப் போல, இந்த ஆட்சியிலும் திமுகவினர் செய்து கொடுப்பார்கள் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைவரும் தங்களது விரல் ரேகையை பதியும் வண்ணம் ரத்தத்தால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பசும்பொன் நோக்கி வரக்கூடிய வகையில் அழைப்பு விடுக்கும் வண்ணம் ரத்தத்தால் தங்களது கை விரல்களை ரேகையா பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் கேட்டுக்கொண்டதுதான் ஸ்பெஷல் அயிட்டம் வேறு வழியைல்லாமல் வந்த நிர்வாகிகள்ரத்த ரேகை பதிவு செய்தனர்