கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார …

1 Min Read
டிடிவி ஓபிஎஸ்

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி  இயற்கை எய்தியதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்வீட்டில்,”கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 12 முறை தொடர்ந்து கேரள சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவரும், அனைத்து சமுதாய மக்களின் நன்மதிப்பை பெற்றவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவருமான உம்மன் சாண்டி இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

உம்மன் சாண்டி அவர்களின் குடும்பத்தினருக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன் தனது ட்வீட்டில்,”கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

அண்டை மாநில முதல்வர் என்ற வகையில் ஜெயலலிதாவிடம் நட்பு கொண்டிருந்தவர் உம்மன் சாண்டி . ஜெயலலிதா  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைச் சந்தித்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று விரும்பியவர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி  மறைவு கேரள மாநில மக்களுக்கு மட்டுமின்றி, தென்மாநில மக்களுக்கும் பேரிழப்பாகும்.

உம்மன் சாண்டி அவர்களை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review