முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் ’நான் மட்டும் பொறுப்பில் இருந்தால்’- என்று கடுகடுத்தார்
“நான் மட்டும் மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொறுப்பில் வேலை பார்த்தால் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஏன் அமைச்சராக இருந்தாலும் உள்ளே வைத்து விடுவேன்” என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சிலைக் கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு – பொன்.மாணிக்கவேல் பகீர் தகவலை தெரிவித்தார்.இந்து அறநிலையத் துறைக்கு சொத்துக்கள் கிடையாது என பொன் மாணிக்கவேல் கூறினார்.
“நான் மட்டும் மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அழிச்சு பொறுப்பில் வேலை பார்த்தால் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஏன் அமைச்சராக இருந்தாலும் உள்ளே வைத்து விடுவேன்” என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு சென்னி மலையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ” ஹிந்து கோவில்கள் மூலம் 28 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ரூபாய் 1000 கூட ஊதியமாக அரசு வழங்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, ” ஹிந்து அறநிலையத்துறைக்கு ஒரு சொத்து கூட கிடையாது. இவையெல்லாம் வைணவ சைவ கோவில்களின் சொத்துக்கள். ஆனால் நான்கு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் தவறான தகவலை கூறி வருகிறார்” என்றார்.
இதைத் தொடர்ந்து, ” சிலை கடத்தல் பிரிவுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலையில் அமர்த்தக் கூடாது எனக் கேட்டுக் கொண்ட பொன் மாணிக்கவேல், தவறு செய்தால் அமைச்சராக இருந்தாலும் கைது செய்வேன்” என்றார்.

இந்து முண்ணனி சார்பில் சென்னிமலை முருகன் கோயிலிருந்து பழனி முருகன் கோவில் வரை நடைபெறும் வேல் யாத்திரையில் நடிகர் ரஞ்சித் , முன்னாள் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வேல்களுடன் பங்கேற்றனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் , அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அரசியல்வாதி தான் என்றார்.நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் நாட்டை காப்பாற்ற ஒரு விஜய் அல்ல ஓராயிரம் விஜய் வந்தாலும் சந்தோசம் தான் என்றார்.
நடிகர் விஜயகாந்த் காலமானத்திற்கு நடிகர் வடிவேலு ஒரு இரங்கல் அறிக்கை விட்டு இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு இளைஞரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து நல்லவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் திருடர்கள் சேர் போட்டு அமர்ந்து விடுவார்கள் என்றார்.