அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்ட அமைச்சருமான சி.வி சண்முகம் இன்று திமுக அரசு தொடர்ந்து அவதூறு வழக்கு தொடர்பாக இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சி.வி சண்முகம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினையும் மற்றும் தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் டி எஸ் எஸ் சுப்பிரமணியம் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வகையில் அந்த வழக்கு விசாரித்த நீதிபதி பூர்ணிமா அரசு தரப்பு தொடத்த வழக்கை விசாரித்து வழக்கு நடத்தலாம் என்றுமுன்னாள் சட்ட அமைச்சரும் தற்போதைதைய மாநிலங்களவை உறுப்பினருமன சி.வி சண்முகம் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வழக்கு விசாரணையில் மற்றவர்கள் ஆஜராகத நிலையிலும் அரசு தரப்பு அவகாசம் கேட்டதின் அடிப்படையிலும் இந்த மாதம் 21 ம் தே முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ஆஜராக நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து சி.வி சண்முகம் இந்த மாதம் 21 ம் தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்று மேலும் ஒரு வழக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினையும்,தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக ஏற்கனவே ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.அந்த வழக்கும் விழுப்புரம் மாவட்ட நீதி மன்றத்தில் நடை பெற்று வருகிறது.அந்த வழக்கு விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்காவிற்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது அவதூறாக பேசியதாக வழக்கு அந்த வழக்கு விசாரணையும் விழுப்புரம் மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.இரண்டு வழக்கிலும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.