குடியரசு தலைவருடன் வெளியுறவு பணி பயிற்சி அதிகாரிகள் சந …

1 Min Read
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்திய வெளியுறவு பணி ( 2022 பேட்ச்) பயிற்சி அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 1, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில்,  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

- Advertisement -
Ad imageAd image

அந்த அதிகாரிகள் இடையே  உரையாற்றிய குடியரசு தலைவர் , இந்திய ராஜிய அதிகாரியாக இருப்பதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது என்றார். சர்வதேச அரங்கில் இந்தியாவின் பங்கும் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. உலகளாவிய வளர்ச்சியின் உந்து சக்தியாகவும், உலகளாவிய நிர்வாகத்தில் ஒரு வலுவான குரலாகவும். வேகமாக விரிவடைந்து வருகிறது – இன்று, நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றம், சைபர் பாதுகாப்பு, பேரழிவுகளைக் கையாள்வது அல்லது தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது போன்ற சிக்கலான உலகளாவிய சவால்களுக்கான தீர்வுகளுக்காக சர்வதேச சமூகம் இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது. இது அவர்களைப் போன்ற இளம் அதிகாரிகளுக்கு புதிய சவால்களுடன் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இளம் அதிகாரிகள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தயாராகும் போது, வெளிநாடுகளில் நமது அனைத்து முயற்சிகள் மற்றும் செயற்பாடுகளின் இறுதி நோக்கம் ந மது சொந்த நாட்டில் அபிவிருத்தியை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று குடியரசு தலைவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அதிக செழிப்பு என்ற பெரிய இலக்கை அடைய  அவர்கள் மற்ற சிவில் பணிகளின் அதிகாரிகளுடன் கைகோர்த்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள 33 மில்லியன் வலுவான இந்திய புலம்பெயர்ந்தவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அவர்கள் கவனமாக வளர்த்து ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தூதரக சேவைகள் மற்றும் சமூக தொடர்பு ஆகியவை  மனிதாபிமான உணர்வுடன் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் . இந்திய சமூக உறுப்பினர்களை தவறாமல் சந்தித்து, அவர்களின் நலனைக் கவனிக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Share This Article
Leave a review