மூன்றாவது முறையாக விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் – காவல்துறையினர் பேச்சு வார்த்தை.

0
75
விவசாயிகள் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகளுக்கு மத்திய,  மாநில அரசுகள் வழங்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தி கடந்த 24நாட்களாக நூதன முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதில் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாம்பழச்சாலை அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் இறங்கி ஈடுபட்டார்,  அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணை பகுதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார், இன்று மூன்றாவது முறையாக திருச்சி சிந்தாமணி அருகில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் கோரிக்கைகளை உடனடியாக மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் மற்றும் ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும், கர்நாடக அரசு மேகதாட்டு அணையை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,

தமிழகத்திற்கு கர்நாடக அரசு, 70 டிஎம்சி தண்ணீர் தர வேண்டிய நிலையில் வெறும், 20 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து விட்டு கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளது.

இதை கண்டித்தும் காவிரி ஆற்றுக்குள் இறங்கி, 8 பெண்கள் உட்பட, 10க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய காவல்துறையினர், மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவிரி ஆற்றில் தீயணைப்பு துறையினர் நீந்தி சென்று
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோரிடம், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here