முதலமைச்சர் ஸ்டாலின் வருகையின் போது 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – சட்டத்துறைஅமைச்சர் சண்முகம்

3 Min Read
சண்முகம் செய்தியாளர் சந்திப்பு

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது , ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.  காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. தமிழகத்தில் கொலை கொள்ளை , பாலியல் தொல்லை குறைந்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் பச்சை பொய்யை கூறிவருவதாகவும், எங்கே பார்த்தாலும் கூட்டு பாலியல், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்

- Advertisement -
Ad imageAd image

தமிழக  முதலமைச்சர் ஸ்டாலின் 26,27  ஆம் தேதி விழுப்புரம் வந்த போது வடமாநிலத்தை சார்ந்த 2ம் வகுப்பு படிக்கும் சிறுமியை 4 சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முதல்வர் வருகையின் போது நடைபெற்ற சம்பவத்தை காவல் துறையினர் மூடி மறைத்துள்ளனர். ஏன்? இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஆய்வின் போதே ஏன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து வந்து தொழில் புரிவோருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் உள்ளது.

ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கிற நிதி அமைச்சர் பி.டி.ஆர் ‌பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளிவந்துள்ளது. அதில் உதயநிதி ஸ்டாலின் சபரீசன் 30 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை சேர்த்து வைத்துள்ளார்கள் அதனை எதில் முதலீடு செய்ய வேண்டும் என புரியாமல் உள்ளதாகவும், கொள்ளை அடித்த பணம் குறித்த ஆடியோ விவகாரம் குறித்து ஏன்? முதல்வர் மறுப்பு தெரிவிக்கவில்லை ஆடியோ வெளியிட்டவர் மீது ஏன்? நடவடிக்கை இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்ஜெட்டில் 2லட்சத்து 70 ஆயிரம் கோடியில் 30 ஆயிரம் கோடியை ஸ்டாலின் தலைமையிலான அரசு கொள்ளை அடித்துள்ளார்கள். மொத்த பட்ஜெட் நிதியில் 10 சதவீதத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுவரை முதல்வர் எந்த  மறுப்பும் தெரிவிக்க வில்லை .

கொள்ளையடித்த பணத்தில் பேனா சின்னம் அமைக்கவுள்ளனர், கொள்ளையடிப்பதற்காக  தான் பேனாசின்னமா? என்றும், இதைப்பற்றிமத்திய அரசு விரைந்து விசாரணை நடத்த வேண்டும் , உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியை விட கொள்ளையடிப்பதில் மிஞ்சி இருக்கிறார் ஸ்டாலின் என்றும்,  திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருவதாகவும்,

தமிகழகத்தில் அறக்கட்டளைகள் அரசு நிலங்களை ஆக்கீரமித்துள்ளது , மக்கள் பணத்தையும் சொத்துக்களை கொள்ளையடித்து வருகிறது இந்த அரசு தொடர்ச்சியாக மக்கள் விரோத நடவடிக்கையில் இந்த அரசு  ஈடுப்படுவதாகவும், மக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கிறது என்றார்.

மேலும் மத்திய அரசு இயற்றாத சட்ட மசோதாவை ஒருமாநில அரசு நிறைவேற்றுகிறது என்றால் இது தொழிலாளர்களை பழிவாங்கும் செயல் என தொழிலாளர்கள் 12 மணி நேர பணியாற்றும் மசோதாவை குறிப்பிட்டு பேசியுள்ளார். அதனை திமுக அரசு பணத்திற்காக செய்துள்ளனர்  என்றும்

கருணாநிதியை விட ஸ்டாலின் அடித்த கொள்ளை தான் இரண்டாண்டு காலம் செய்துள்ள சாதனை என்றும்,

ஜி.ஸ்கொயர் பண பரிவர்த்தனை குறித்தும் குற்ற பின்னனி குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளதாகவும், இந்த அரசு கோமாளி, துக்லக் அரசு என்றும்,

அதிமுக அரசு  பெண்களுக்கு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை தொலைத்து, மறைத்து திருமணம் செய்யும் மணமக்களுக்கு பிராந்தி, பீர் பாட்டில், கொடுக்கும் திட்டத்தை கொண்டு வருகிறார்கள் . இதுதான் இந்த திமுக அரசின் லட்சணம், இதுதான் இவர்கள் சாதனை என்றும் விமர்சித்தார்.

அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்து இருந்து வருகிறது. திமுக அரசு கோமாளி அரசாக செயல்பட்டு வருவதாகவும், சட்டம் போட வேண்டியது,  மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் உடனே பின்வாங்குவதை தான் ஸ்டாலின் அரசு கொண்டுள்ளதாக. சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review